டெல்லி: ‘தர்மேந்திர பிரதானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கை. நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை அவமானப்படுத்த வேண்டாம்’ என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ‘டெல்லியில் மாணவர்களை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனவும் ராகுல்வலியுறுத்தியுள்ளார்.
