சென்னை: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், கணினி ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. ஆன்லைன் (tndtegteonline.in) விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி ஆகஸ்ட் 17ல் முடிவடைகிறது.
சுருக்கெழுத்து தேர்வு (ஜூனியர், இண்டர்மீடியேட், சீனியர்) ஆகஸ்ட் 29 மற்றும் 30ம் தேதியும், கணக்கியல் தேர்வு ஆகஸ்ட் 31ம் தேதியும், தட்டச்சு தேர்வு (பிரி-ஜூனியர், ஜூனியர், சீனியர்) செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதியும், கணினி சான்றிதழ் தேர்வு நவம்பர் 9 முதல் 11ம் தேதி வரையும், நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகள் நவம்பர் 11ம் தேதி வெளியிடப்படும்.
