உல்லாசத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் பேராசிரியை அந்தரங்க வீடியோ, படத்தை கணவர், மாணவர்களுக்கு பகிர்ந்த பேராசிரியர்: திருச்சியில் உள்ள ஒன்றிய அரசின் கல்லூரியில் பரபரப்பு

திருவெறும்பூர்: உல்லாசத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் பேராசிரியையின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை கணவர், மாணவர்களுக்கு பகிர்ந்த திருச்சி என்ஐடி பேராசிரியரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் என்ஐடி கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு பேராசிரியராக ஜெரால்டு (50) பணியாற்றி வருகிறார். என்ஐடி குடியிருப்பில் வசித்து வரும் இவருக்கும், அதே கல்லூரியில் வேலை பார்க்கும் 40 வயதான பேராசிரியைக்கும் கடந்த 2021ல் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருந்த ேபாது வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜெரால்டு தனது செல்போனில் எடுத்து வைத்திருந்தார். கடந்த 2025ல் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் உல்லாசத்துக்கு பேராசிரியையை ஜெரால்டு அழைத்தார். அதற்கு அவர் மறுத்ததால் தனது செல்போனில் இருவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக ஜெரால்டு மிரட்டினார். இருப்பினும் பேராசிரியை அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெரால்டு, போசிரியையுடன் ஒன்றாக இருக்கும் அந்தரங்க வீடியோ, புகைப்படங்கள் மற்றும் இருவர்களுக்குள் இருந்த மெசேஜ் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றை பேராசிரியையின் கணவர், கல்லூரி மாணவர்கள், சக பேராசிரியர்கள் ஆகியோருக்கு பகிர்ந்துள்ளார். இந்த தகவல் தெரிய வந்த பேராசிரியை கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக திருச்சி சைபர் கிரைம் போலீசில் கடந்த 19ம்தேதி பேராசிரியை புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஜெரால்டு வீட்டுக்கு சென்ற சைபர் கிரைம் போலீசார், அவரை கைது செய்தனர்.

Related Stories: