ஜனநாயகன் படம் தீபாவளி, பொங்கல் போன்றது… டெல்லியில மாணவர் போராட்டமா..? அதெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க… தவெக அமைச்சரின் பதிலால் சர்ச்சை

சங்ககிரி: டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தை பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீங்க. என்று தவெக அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய்தமிழன் பார்த்திபனிடம், டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘அது டெல்லியில் நடக்கும் பிரச்னை. அதை பத்தியெல்லாம் என்னிடத்தில் கேட்காதீங்க. அதை மேலிடத்தில் இருப்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உள்ளூரில் மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளது. குறிப்பாக சங்ககிரியில் புதிய பஸ் ஸ்டாண்ட் இயங்கவில்லை. 300 வருடம் பழமையான கோயிலை புதுப்பிக்க வேண்டும். சாலை, சாக்கடை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இதைப்பற்றியே நான் யோசிக்கிறேன்,’’ என்றார்.

அதேநேரத்தில், ‘‘விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவது, தீபாவளி பொங்கல் போல உள்ளது. அந்த படத்தில் நானும் ஒரு சீனில் நடித்துள்ளேன். அது ஒரு பொற்காலம்’’ என்றும் தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்தியாவே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் மாணவர் போராட்டம் குறித்து பொறுப்பான பதவியில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார் என்று வலைதளங்களில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தற்போது வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Related Stories: