தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம்தான்: கனிமொழி எம்பி விமர்சனம்

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவிலை தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதல்வர் விஜய் உள்பட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான். நாளை(இன்று) பணிக்கு திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: