சென்னை: நீட் தேர்வை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சியே அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார் . மாணவர்களின் உணர்வுகளை காங்கிரஸ் தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது கீழ்த்தரமான செயல். காங்கிரஸ் நடத்தும் போராட்டம் மாணவர்களின் நலனைக் காக்கும் போராட்டம் அல்ல என்பதை மக்கள் அறிவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
