ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கச்சத்தீவு அருகே படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 9 மீனவர்களையும் இலங்கை படை சிறைப்பிடித்தது. ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டை பெற்றுக் கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
