ஈரோடு மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதியடையுள்ளனர்.

ஆவின் பால் பாக்கெட்டுகள் சற்று நேரத்தில் விற்றுவிடுவதாகவும் ஈரோடு மக்கள் புகார் அளித்துவருகின்றனர். ஆவின் முகவர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்த 49 ஆயிரம் லிட்டர் பால், கடந்த சில நாட்களாக 45 ஆயிரம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோட்டின் ஆவின் நிறுவனம் முகவர்களுக்கு வழங்கும் பால் பாக்கெட்டுகள் எண்ணிக்கையை குறைத்துள்ளது. நிர்வாக செலவு மற்றும் பால் வரத்து குறைவு காரணமாக ஆவின் பால் விநியோகத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் பால் கிடைக்காததால் தனியார் பால் பாக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

ஈரோடு மாநகரில் 4 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் குறைத்து விநியோகம் செய்யப்படுவதாகவும், பாக்கெட்டுகள் எண்ணிக்கையை குறைத்ததால் பல இடங்களில் பால் தட்டுப்பாடு நிகழுவதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். அதிகாலை 5:30 மணிக்கே பால் பூத்களுக்குச் சென்றாலும், பால் தீர்ந்துவிட்டதாகக் கூறி முகவர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.

குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆவின் கிரீன் (டயட் / டோன்டு) மற்றும் ஸ்பெஷல் பால் பாக்கெட்டுகள் போதிய அளவில் விநியோகிக்கப்படுவதில்லை. ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 4,000 லிட்டர் வரை பால் விநியோகம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: