சென்னை: சிவாஜி கணேசனின் 25வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ் குமார் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், மாநில துணை தலைவர் கோபண்ணா, எம்எல்ஏ தாரகை கத்பட், பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தமிழ்ச்செல்வன், மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், ஓபிசி பிரிவு மாநில தலைவர் நவீன், எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர்கள் கராத்தே செல்வம், ஜோதி பொன்னம்பலம், கவுன்சிலர் அமிர்தவர்ஷினி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மேகதாதுவில் எந்த தடுப்பு கட்டினாலும், அதற்கு எதிர்ப்பு என்பதுதான் காங்கிரஸ் கட்சியினுடைய நிலைப்பாடு. தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக என்றும் துணை நிற்கும்’ என்றார்.
