அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 8,193 கோயில் அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 8,193 கோயில்களின் அறங்காவலர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 49(1)ன் படி பட்டியலில் சாராத 8,193 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

அறங்காவலர் நியமன அறிவிப்பு, திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைய வழியில் பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.

அடுத்த மாதம் 20ம் தேதி மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஏற்கனவே, 1,012 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: