கறம்பக்குடி அருகே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்

கறம்பக்குடி, ஜூலை 21: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் மழையூர் உள்ளிட்ட தாலுகா பகுதியில் தெருநாய்கள் அதிகமாக தெருக்களில் சுற்றி திரிகின்றனர். இதனால் கிராமத்திற்குள்ளும் தெருவிற்குள்ளும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் பல்வேறு பிரதான சாலைகளில் தெரு நாய்கள் நூற்றுக்கு மேற்பட்ட நாய்கள் ஒன்றுகூடி ஒன்றை ஒன்று கடித்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். மேலும் தினம்தோறும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், விவசாயிகள், குழந்தைகளை தெருநாய்கள் சுற்றி கடித்து விடுவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். பின்னர் கறம்பக்குடி பகுதியில் தாலுகா மழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிற்கு தெரு நாய்கள் தெருக்களில் சுற்றித்திரிந்து கடித்து பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன் கால்நடை நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களில் சுற்றித்திரியும் நாய்கள் பிடித்து கட்டுப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: