புதுக்கோட்டையில் கன மழை

புதுக்கோட்டை, ஜூலை 21: புதுக்கோட்டையில் நேற்று அரைமணி நேரம் கன மழை பெய்தது. இதனால் கடந்த சில தினங்களாக வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தென்மேற்கு பருவமழையில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் பிற்பகல் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம், காமராஜபுரம், போஸ் நகர், காந்தி நகர், பிருந்தாவனம், மச்சுவாடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மகிழ்சியடைந்தனர்.

Related Stories: