அரியலூர்,ஜூலை 21: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மீண்டும் பணி வழங்கக் கோரி, நீக்கம் செய்யப்பட்ட சமையல் பணியாளர்கள் 40 பேர், அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருமணாளினிடம் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றி வந்தோம். தற்போது எங்களை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே பணியில் இருந்து நீக்கப்பட்ட எங்களை, மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை மகளிர் திட்டத்தில் இருந்து மாற்றி சத்துணவு திட்டத்தில் இணைத்து எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
