சென்னை: தமிழ்நாடு அரசின் முத்திரைகள் மற்றும் பதிவு துறையின் முன்னாள் கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.ஆறுமுக நைனார் அறிக்கை: உலகமெங்கிலும் குறிப்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் அதிகளவு வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக ஏராளமான முதியவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எல்நினோ புயல் காரணமாக பருவ மழையை கணிசமான காலத்துக்கு தாமதப்படுத்தி வருகிறது.
எல்நினோ சூறாவளி புயல் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளை தாக்கும் அரிதான நிகழ்வினால் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதை நமக்கு இயற்கை விடுக்கும் எச்சரிக்கையாக எடுத்து கொள்ளலாம். இத்தகைய எல்நினோ புயல், வெப்ப அலை மற்றும் கடுமையான வெப்பத்தில் இருந்து இந்தியா மற்றும் உலகமெங்கிலும் வசிக்கும் இந்திய மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
