திரிபுரா மாநில காவல்துறை இயக்குநர் அனுராக் தங்கர் மர்ம மரணம்.!!

அகர்தலா: திரிபுரா மாநில காவல்துறை இயக்குநர் அனுராக் தங்கர், மர்ம மரணம் அடைந்திருக்கிறார். அகர்தலாவில் உள்ள காவல் தலைமை அலுவலகத்தில் டிஜிபி அனுராக் உடல் மீட்கப்பட்டது. டிஜிபி அனுராக் தங்கர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

1994 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான டிஜிபி அனுராக் தன்கர், இன்று காலை அகர்தலாவில் உள்ள காவல் துறை தலைமையகத்திற்கு வந்தார். அவர் தனது அறையில் தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நண்பகல் 12 மணி அளவில் அவர் தனது அலுவலக அறையின் கழிவறையில் அசைவற்ற நிலையில் கிடந்தார்.

இதனைப் பார்த்த அவரது உதவியாளர்கள், உடனடியாக அவரை மீட்டு அகர்தலாவில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், டிஜிபி அனுராக் தன்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, அவர் தானே உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பலத்த சந்தேகம் காவல் துறைக்கு எழுந்துள்ளது. இருப்பினும், அவரது மரணத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அகர்தலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மை தெரிய வரும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் டிஜிபி மரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. திரிபுரா மாநிலத்தினுடைய காவல்துறை இயக்குநர் அனுராக் தங்கரின் மர்ம மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையின் தலைவராக செயல்படும் டிஜிபி இயக்குனர் அவரது அறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே அந்த மாநிலத்தின் பல்வேறு வழக்குகளை அவர் விசாரித்து வந்த நிலையில் அவர்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஏதேனும் நெருக்கடி கொடுத்தார்களா? அல்லது வேறு எதாவது விஷங்களுக்காக அவர் அழுத்தம் கொடுக்கப்பட்டு அதன் காரணமாக அவர் தற்கொலை என்ற முடிவை எடுத்தாரா? அல்லது மர்ம மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணியில் இருந்த டி.ஜி.பி மர்மமான முறையில் மரணித்திருப்பது மரணம் திரிபுரா மாநிலத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே, திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சஹா மற்றும் தலைமைச் செயலாளர் ஜே.கே. சின்ஹா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக காவல் துறை தலைமையகத்திற்கும் மருத்துவமனைக்கும் விரைந்து சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தனர்.

Related Stories: