விருதுநகர், ஜூலை 20: விருதுநகர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக பாமாயில் துவரம் பருப்பு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியவாசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படும். அதன் விபரம்: பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ.2,340 க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து, தற்போது ரூ.2,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு நயம் 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,800 முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து குறைந்த காரணத்தால் குவிண்டாலுக்கு ரூ.300 உயர்ந்து, மூட்டை ஒன்று ரூ.11,100 முதல் ரூ.11,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ நயம் லையன் வகை கடந்த வாரம் ரூ.10,300 முதல் ரூ.10,500 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்து, மூட்டை ஒன்று ரூ.10,800 முதல் ரூ.11,100 வரை விற்கப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக துவரம் பருப்பு விலை உயர்ந்துள் ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை ரூ.10,600 முதல் ரூ.10,800 வரை விற்ற நிலையில் இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரிப்பு காரணமாக குவிண்டாலுக்கு ரூ. 200 குறைந்து, மூட்டை ஒன்று ரூ.10,400 க்கு விற்பனையாகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு பர்மா எப்.ஏ.க்யூ வகை கடந்த வாரம் ரூ.8,600 முதல் ரூ.8,800 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.400 வரை உயர்ந்து, மூட்டை ஒன்று ரூ.9ஆயிரம் முதல் ரூ.9,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ. 9,800 முதல் ரூ.10ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.600 குறைந்து, மூட்டை ஒன்று ரூ.9,200 முதல் ரூ.9,300 வரை விற்கப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ ரூ.9 ஆயிரம் முதல் ரூ.9,150 வரை விற்கப்பட்டது.
இந்த வாரம் மூட்டைக்கு ரூ.100 வரை குறைந்து, தற்போது மூட்டை ஒன்று ரூ. 8,900 முதல் ரூ.9ஆயிரம் வரை விற்பனையாகிறது. அதே நேரம் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களான வத்தல், பட்டாணி பருப்பு, கடலை எண்ணெய், காபி முதலானவற்றின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
