பொது சிவில் சட்ட மசோதா மபி மாநில அமைச்சரவை ஒப்புதல்

போபால்: மபி முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.இதில், பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் முதல்வர் கூறுகையில், இந்த சட்டத்தை பெண்கள் அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு முக்கிய படி ஆகும். பழங்குடியினரை தவிர மற்ற அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

திருமண வயது ஆண்களுக்கு இருபத்தி ஒன்றாகவும், பெண்களுக்கு பதினெட்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டாயத் திருமணப் பதிவு என்பது இந்தப் புதிய சிவில் சட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சட்டபேரவையின் மழைக்கால கூட்ட தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்ட தொடரில் மசோதா நிறைவேற்றப்படும். தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்றார்.

Related Stories: