உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கேரளம், மணிப்பூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவனந்தபுரம்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு இன்று கேரளா மற்றும் மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின. கால்பந்து போட்டிக்கு கேரளத்தில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

நள்ளிரவில் தொடங்கும் போட்டி அதிகாலையில் முடிவடையும் என்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

அதன்படி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று (20ம் தேதி) கேரளத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை கல்லூரிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மணிப்பூர் மாநிலத்திலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: