தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த கலைஞர்கள்: தமாகா பாராட்டு

சென்னை: தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வானவர்களுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:  தமிழ் சினிமாவின் மூலம் தேசிய விருதுக்கு தேர்வானவர்கள் தேசிய அளவில் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரும் புகழும் சேர்த்திருப்பது சிறப்புக்குரியது.

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத்தில் உள்ள பல துறைகளுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. கலைஞர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக தமிழ் சினிமாவின் மூலம் தேசிய விருது பெறும் அனைவரையும் பாராட்டி, தொடர்ந்து கலைத்துறையில் சிறந்து விளங்கி பல்வேறு உயரிய விருதுகள் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: