திமுக ஆட்சியில் கொண்டு வந்த நான் முதல்வன் திட்ட பெயரை மாற்றியது வழக்கமானதுதான்: அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

சென்னை: எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்துகொண்டார்.

தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:
கடந்தாண்டு 1,02,000 மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 1,50,000 மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைக்க வேண்டுமென்ற திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றியது தொடர்பான கேள்விக்கு, அந்த அரசாங்கத்தில் எடுத்த முடிவு அது; எங்க அரசாங்கம் வந்த பிறகு நாங்கள் நடைமுறைகளை மாற்றுவோம். இதுதானே வழக்கம்; இந்த வழக்கத்திற்கெல்லாம் குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: