ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்: அமைச்சர் மரிய வில்சன் தகவல்

தூத்துக்குடி: வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சருமான மரிய வில்சன் சென்னையில் இருந்து நேற்று தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார்.

விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தமிழக முதல்வர் 15, 16 நாட்கள் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளருடன் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம் பெறும். தமிழ்நாடு முதல்வரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை 100 சதவீதம் மக்கள் வரவேற்கின்றனர்’ என்றார்.

Related Stories: