ரயிலில் சென்ற பயணி பாம்பன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை?

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் ரயில் பாலம் அருகே தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ள இடத்தில், கடலில் ஆண் சடலம் மிதப்பதாக நேற்று மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.ஐ காளிதாஸ் தலைமையில் போலீசார் சென்று ஆண் சடலத்தை மீட்டு சோதனை செய்தனர்.

45 வயது மதிக்கத்தக்க அவர் காக்கி நிற பேண்ட், ரோஸ் நிற சட்டை அணிந்தபடி இறந்து கிடந்தார். முகம் மற்றும் தலையில் லேசான காயங்களுடன் கரை ஒதுங்கியதால் ஓடும் ரயிலில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்து விட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: