டெல்லி: வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை இனி தண்டனைக்குரிய குற்றமாக்க, ஜூலை 20ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் புதிய மசோதா ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியலமைப்புக்கு வழங்கும் அதே சட்டப்பூர்வ அந்தஸ்தை, தேசிய பாடலுக்கும் வழங்க தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026 அறிமுகமாக உள்ளது.
