தூத்துக்குடி அருகே துணிகரம்: வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடி, ஜூலை 17: தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி கோல்டன்நகரை சேர்ந்தவர் நோவா. இவரது மகன் ஆஷிக் தனசிங் (26). இவர் மடத்தூர் பகுதியில் உள்ள ஆயில் கம்பெனியில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபிகா, கர்ப்பிணியாக இருப்பதால் கடந்த 12ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆஷிக் தனசிங் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 17 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆஷிக் தனசிங், புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: