கோவை தவெகவில் உட்கட்சி மோதல்: பெண் நிர்வாகியின் ஆடையைக் கிழித்த சக நிர்வாகிகளால் அதிர்ச்சி

 

கோவை: கோவை மாவட்ட தவெகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏவுக்கு மாலை போடச் சென்ற பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை கணியூரில் சூலூர் எம்எல்ஏ சுகுமார் தலைமையில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடந்தது. அப்போது எம்எல்ஏ சுகுமாருக்கு கட்சி பெண் நிர்வாகி ஒருவர் மாலை அணிவிக்க முயன்றார். எம்எல்ஏவுக்கு மாலை அணிவிக்கச் சென்ற பெண் நிர்வாகியை சக நிர்வாகிகளே தடுத்து நிறுத்தினர். பெண் நிர்வாகியை தடுத்து நிறுத்தி ஆடையை கிழித்து தகாத வார்த்தைகளால் திட்டியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சி மேலிடத்துக்கு இது தொடர்பான தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: