அரசுக்கு எதிராக கோஷமிடுவது தேசத்துரோக குற்றமாகாது: பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் கருத்து

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் கைத்தல் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒரு வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் 4 பேர் மீது காவல்துறையினர் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டது மட்டுமே தேசத்துரோக குற்றமாகாது என கூறி 4 பேரை விடுதலை செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம், “அரசின் செயல்பாடுகளை விமர்சித்து முழக்கங்களை எழுப்புவது ஒரு ஜனநாயக உரிமை. ஜனநாயகத்தில் அரசையோ, அதன் கொள்கைகளையோ எதிர்த்து போராடுவதும், முழக்கங்களை எழுப்புவதும் ஒரு குடிமகனின் கருத்துரிமை. வன்முறை போராட்டம் என்பது கலவரமாக அமையலாம்.

ஆனால் அத்தகைய வன்முறை செயல்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்பையோ அல்லது அவமதிப்பையோ தூண்டும் செயல்களாக கருதப்படாது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அமைப்பில், அரசாங்கத்துக்கு அல்லது நிர்வாகத்தின் எந்தவொரு பிரிவுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்புவது மட்டுமே குடிமக்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்வதற்கான போதுமான காரணமாக அமையாது” என தீர்ப்பு வழங்கியது.

Related Stories: