சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையில்லா சான்றுகள் மற்றும் 10 தனியார் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.
மேலும், சி.பி.எஸ்.இ, மற்றும் பிறவாரியப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகளும் துவக்க அங்கீகாரம் பெற //tnschools.gov.in/dms என்ற இணையதளம் வாயிலாகவும், தொடர் அங்கீகாரம் பெற //emis.tnschools.gov.in < https://tnemis.tnschools.gov.in/auth/login > என்ற இணையதளம் வாயிலாகவும் அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.
