சினிமாவில் நடிக்க போட்டோ ஷூட் எடுப்பதாக அழைத்து விடுதியில் சின்னத்திரை நடிகையை நிர்வாண படம் எடுக்க முயற்சி: 2 தோழிகளுடன் தயாரிப்பாளர் கைது

 

சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக சின்னத்திரை நடிகையை விடுதிக்கு அழைத்துச்சென்று நிர்வாணப்படுத்தி போட்டோ எடுக்க முயன்ற சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிந்து (31), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சின்னத்திரை நடிகையான இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும், சினிமாவில் துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் சிந்துவை சினிமா தயாரிப்பாளர் ஒருவர் போன் செய்து, நான் ஒரு திரைப்படம் எடுக்க உள்ளேன். அந்த படத்தில் உன்னை நடிக்க வைக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

அப்போது சிந்து, சினிமா என்பதால் தயாரிப்பாளரிடம் உடனே நடிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார். பிறகு தயாரிப்பாளர் புதிய திரைப்படத்தில் நடிக்க உன்னை போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என்று கூறி சாலிகிராமத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வருமாறு தயாரிப்பாளர் அழைத்துள்ளார். அதன்படி, சிந்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை சந்திக்க அவர் அழைத்த தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் விடுதியில் உள்ள அறையில் 2 பெண்கள் மற்றும் 7 வயதில் ஒரு சிறுமி இருந்துள்ளனர். அப்போது தயாரிப்பாளர் சொன்ன நடிகை நீங்கள் தானே என்று அறைக்கு அழைத்துள்ளனர். பிறகு புதிய படத்தில் உங்களுக்கு அம்மன் வேடம் அளிக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 3 போட்டோ எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதற்கு சிந்துவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது அந்த 2 பெண்களும் அம்மன் கதா பாத்திரம் என்பதால் உங்கள் உடம்பில் எந்த காயமோ… அல்லது தழும்போ இருக்க கூடாது என்று கூறியுள்ளனர். அதற்கு சிந்துவும் எனது உடலில் எந்த காயமோ தழும்போ இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், 2 பெண்களும் சிந்துவிடம் உங்கள் கையால் கண்களை மூடிக்கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது சிந்து, அம்மன் கதா பாத்திரத்திற்கு ஏன் நிர்வாணமாக போஸ் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சினிமா வாய்ப்பு என்றால் அப்படி தான் என கூறி, சிந்துவை கட்டாயப்படுத்தி சினிமா தாயாரிப்பாளர் முன்பு 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி போட்டோ எடுக்க முயன்றுள்ளனர்.

ஒரு கட்டத்தில் நடிகை சிந்துவின் ஆடைகளை 2 பெண்களும் அவிழ்க்க முயன்றதும், அவர்களிடம் இருந்து சின்னத்திரை நடிகை தப்பித்து வெளியே ஓடிவந்துள்ளார். பின்னர் நடந்த சம்பவம் பற்றி சின்னத்திரை நடிகை சிந்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கும் விடுதியில் தங்கி இருந்த பெருங்குடியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் (65) மற்றும் அவரது தோழியான தரமணியை ேசர்ந்த இந்திராணி (40), விருதுநகரை சேர்ந்த புகைப்பட கலைஞர் கார்த்திகா (35) என தெரியவந்தது.

சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, சினிமா வாய்ப்பு தருவதாக சின்னத்திரை நடிகையிடம் தயாரிப்பாளர் உல்லாசமாக இருக்க அழைத்ததும், அதற்கு உடந்தையாக இரண்டு பெண்கள் இருந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நந்தி ராமநாதன் மற்றும் அவரது தோழிகளாக 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களுடன் தங்கி இருந்த 7 வயது சிறுமியை போலீசார் மீட்டு அடையாறு பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: