அரசு பள்ளியில் முதல்வர் பேச்சை ஒளிபரப்பிய ஹெச்எம் சஸ்பெண்ட்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று கரூரில் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் வருகையையொட்டி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி, 2 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜய் பேசிய அரசியல் பேச்சு ஸ்மார்ட் போர்டு மூலம் வகுப்பறையில் ஒளிபரப்பபட்டது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அரசு பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியது பள்ளியில் ஒளிபரப்பபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: