அநாகரீகமாக பேசும் விஜய்: ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட சமூக வலைதள பதிவு: கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசனகர்த்தா கொடுத்த ஸ்கிரிப்டையே முழங்கி தள்ளியுள்ளார். இடைத்தேர்தலுக்காக பிரசாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மீண்டும், மீண்டும் தனது தவறை உணராமல் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, தில் இருக்கா, திராணி இருக்கா, ஒரு உம் கிடையாது என்று அநாகரிகமாக பேசுவது போன்ற தனது டிரேட்மார்க் பேச்சுக்களையும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.

நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் என்று சொல்லும் முதல்வருக்கு, தன்னை பார்க்க வந்து இறந்தவர்களுக்கோ அவரது குடும்பத்தாருக்கோ பொதுவெளியில் ஒரு மன்னிப்பு கேட்க கூட மனது வருவதில்லை. மாறாக, தங்களை நம்பி மாற்றத்திற்கான அரசியலை நோக்கி வரும் மக்களை உசுப்பேத்தி ரசிக மனநிலையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

மேலும், தீர்ந்து போன சக்தியில் இருந்து குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதல்வரே பார்ட்டி பண்ட் பற்றி பேசினால் திமுக ஓடுவது உண்மை தான், ஆனால், உங்கள் கட்சியினர் செய்யும் முறைகேடுகள் நாளொறு வண்ணம் செய்திகளில் வருவதை நீங்கள் பார்ப்பதில்லையோ? முடிந்தால் பாருங்கள். நடிகரை பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நினைவு மண்டபம், உறவினர்களுக்கு அரசு வேலை. வாட் புரோ, இட்ஸ் வெரி ராங் புரோ? (ஏ)மாற்றம். இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories: