கட்சி விட்டு கட்சி தாவுகிறவர்கள் கொள்கை பிடிப்பு இல்லாமல் பதவி வெறி கொண்டவர்கள்: திருமாவளவன் பேச்சு

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நேற்று நடந்தது. அப்போது அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: என்னிடம் இரண்டு சீட்டுதான் உள்ளது. யாரிடமாவது போய் “எங்களை முதலமைச்சர் ஆக்க வேண்டும்” என்றோ, “துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும்” என்றோ கேட்டோமா? தற்போது நாம் கேட்கவே இல்லை.

நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்கிறார்கள். “திருமாவளவனுக்கு இந்த தகுதி இருக்கிறது” என்று தீர்மானம் செய்யும் காலம் வரும். அதுவரையில் உழைப்பது மட்டும்தான் என் வேலை, பாடுபடுவது மட்டும்தான் என் வேலை. திமுகவினரையோ, மதிமுகவினரையோ தயவு செய்து விசிக கட்சியினர் சமூக ஊடகங்களில் எதுவும் பேச வேண்டாம்.

கட்சி விட்டுக் கட்சி தாவுபவர்கள் யாராக இருந்தாலும், கொள்கைப் பிடிப்பு இல்லாமல் பதவி வெறி கொண்டவர்களாக, பதவிப் பிடிப்பு உள்ளவர்களாக இருப்பவர்கள்தான். எந்தக் கட்சியை எடுத்துக்கொண்டாலும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி “இப்பவே போனால் தவெகவில் சேர்ந்துவிட்டால் நாளைக்கு எம்பி சீட் வாங்கலாம்” என்று நினைப்பவர்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: