பட்டியலின கண்காணிப்பு குழு சீரமைப்பு முதல்வர் தலைமையில் ஆ.ராசா, திருமாவளவன், தனபால் உள்ளிட்ட 59 உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் சுப்பையன் வெளியிட்ட உத்தரவில் கூறிருப்பதாவது : பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு, கண்காணிப்பு குழு மறுசீரமைக்கப்படுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் தலைமையில்59 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்கள் விவரம் வருமாறு: நிதித்துறை அமைச்சர் மரியவில்சன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் அமைச்சர்கள் ராஜ்மோகன், விஸ்வநாதன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா, கமலி, லோகேஷ் தமிழ்செல்வன்,

ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.தனபால் (அதிமுக), ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்), ஜி.செல்வம் (திமுக), ரவிகுமார் (விசிக), ஆ.ராசா (திமுக), திருமாவளவன் (விசிக தலைவர்), செல்வராஜ் (சிபிஐ), ராணி ஸ்ரீகுமார் (திமுக), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.ரவி, ஆர்.பிரகாசம், எம்ஆர்.பல்லவி, இ.ராஜசேகர், இ.தென்றல்குமார், சிந்து, இளையராஜா, சம்பத்குமார், வேலு, அம்பேத்குமார், கவுதம்,

அருள் விக்னேஷ், நல்லதம்பி, ஜெயசங்கரன், உஷாராணி, சந்திரசேகர், தமிழ்செல்வி, திராவிடமணி, குட்டி, அய்யனார், சத்யா, ரவிசங்கர், சிவகுமார், கணேசன், ஜோதிமணி, செந்தில்செல்வன், லதா, மாரிமுத்து, கோவி செழியன், சுப்பிரமணியன், இளங்கோவன், கருப்பையா, சபரி ஐங்கரன், கார்த்திக், கதிரவன், திலீபன் ஜெய்சங்கர், ராஜா மற்றும் அலுவல்சார் உறுப்பினர்களாக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணைய இயக்குநர், துணை இயக்குநர், பழங்குடி வகுப்பினருக்கான தேசிய ஆணைய இயக்குநர், துணை இயக்குநர் உள்ளிட்ட 59 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை திருத்தச் சட்டத்தை ஆய்வு செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான உரிமையை நிலைநாட்டல், வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு மறுவாழ்வு பற்றிய விவரங்கள், இந்த சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள், மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் உரிமைகள் குறித்து ஆய்வு செய்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: