தவெக அரசும், அமைச்சரவையில் பங்கு கொண்டிருக்கும் காங்கிரசும் தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டை பெற்றுத் தருவதை உறுதிசெய்ய வேண்டும்: கனிமொழி எம்பி வலியுறுத்தல்

சென்னை: தவெக அரசும், அமைச்சரவையில் பங்கு கொண்டிருக்கும் காங்கிரசும் தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டை பெற்றுத் தருவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: ஜூன் மாதம் 9.91 டி.எம்.சியும், ஜூலை மாதத்தில் 32 டி.எம்.சியும் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா நீர்பாசனத்துறை அமைச்சர் கூறியிருப்பதை ஏற்கமுடியாது.

குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், தவெக அரசும், அவர்களுடன் அமைச்சரவையில் பங்கு கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டை பெற்றுத்தருவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: