கரூர் நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை கூடாது கிருஷ்ணசாமி கண்டனம்

சென்னை: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கரூரில் நடந்த விஜய் தேர்தல் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா உள்பட பலரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை தந்திட விஜய் நேரடியாக கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை கொடுக்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அதனால், உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடலாம்; 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும். எனவே, நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை விஜய் ரத்து செய்ய வேண்டும்; அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: