கோவை மாவட்ட கலெக்டருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கோவை: கோவை கோர்ட்டில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால், வழக்கு விசாரணை தொடர்ந்து தேக்கமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று கோவை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் யாரும் நியமிக்கப்படாததால் ஆஜராகவில்லை.

சாட்சி விசாரணை நடத்த முடியவில்லை. இதனால், வழக்கை ஒத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு தரப்பில் இருந்து உரிய அரசாணை வராததால் வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு தரப்பின் தவறு காரணமாக வழக்கு ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டதாக கூறி, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று நீதிபதி சிவக்குமார் தீர்ப்பளித்தார்.

Related Stories: