வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ராகவம்பாள்புரம் ஊராட்சியில் உள்ள ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த குடோனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 40 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
குடோனில் நேற்று காலை தினக்கூலி தொழிலாளர்கள் 15 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அடுக்கில் இருந்த நெல்மூட்டைகள் திடீரென சரிந்து விழுந்தது. இதில், ஆர்சுத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு (56), சகுந்தலா (40) ஆகியோர் மீது 50க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதில், சின்னப்பொண்ணு மூச்சுத்திணறி பலியானார். சகுந்தலா பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
