அரியலூர் கலெக்டர் தலைமையில் நடந்தது பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

பெரம்பலூர்,மார்ச் 12: பெரம்பலூர் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விடிய விடிய சிவ பக்தர்கள் உற்சாகத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.பெரம்பலூரில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்றிரவு மகா சிவ ராத்திரியை முன்னிட்டு 5 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கோயில் குருக்களான சாமிநாத சிவாச்சாரியார் முன்னின்று நடத்தினார். முதல்கால பூஜை இரவு 7.31 மணிக்கு தொடங்கியது. விடிய விடிய பூஜைகள் நடைபெற்றன. 5ம் கால பூஜை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. 5 கால பூ ஜைகளுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரருக்கு மகா தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பெரம்பலூர், எளம்பலூர், விளாமுத்தூர், அரணாரை, நொச்சியம், கவுல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல இந்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள வாலிகண்டபுரம் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோயில், சு.ஆடுதுறை  அபராத ரட்சகர், ஏழ்வார் குழலி உட ணுறை சுகுந்த குந்தலாம்பிகை (குற்றம் பொறுத்தவர்) கோயில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோயில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோயில், குரும்பலூரில் பஞ்ச நதீஸ்வரர் கோயில், பெரம்பலூர் அபிராமபுரம், பெத்த நாச்சியம்மன் உடனுறை  பொன்னம்பல எமாபுரீஸ்வரர்,  கல்லனையான் கோயில், எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையடிவாரத்திலுள்ள காகன்னை ஈஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி விழா மிகமிக சிறப்பாக நடைபெற்றது. விழாக்களில் சுற்றுவட்டார பொதுமக்கள், சிவ பக்தர் கள் திரளாக கலந்து கொண்டு விடிய, விடிய வழிபட்டனர்.

Related Stories: