ஊட்டி கமர்சியல் சாலை நடைபாதையில் பள்ளம்

 

ஊட்டி,ஜூலை3: ஊட்டி கமர்சியல் சாலை நடைபாதையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் தொடர்கிறது. ஊட்டிக்கு நாள்தோறும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல், கிராமப்புறங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகின்றனர். இங்கு வரும் மக்கள் அனைத்து தேவைகளுக்கும் ஊட்டி நகரின் மத்திய பகுதியான கமர்சியல் சாலை பகுதிக்கு வருகின்றனர். இந்த சாலையோரத்தில் கடைகளின் முன்புறம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் ஒரு சில இடங்களில் இன்டர்லாக் கற்கள் மற்றும் கழிவு நீர் கால்வாய் மூடிகள் சேதம் அடைந்துள்ளன.

இதனை அறியாமல் நடந்துச் செல்லும் பாதசாரிகள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுகிறது. குறிப்பாக, காபி அவுஸ் சந்திப்பு பகுதியில் நடைபாதை பழுதடைந்துள்ளது.கழிவு நீர் கால்வாய் மூடிகள் உடைந்து காணப்படுகிறது. இதனை அறியாமல் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.குறிப்பாக, பள்ளி குழந்தைகள் மற்றும் இந்த வழியாக நடந்துச் செல்லும் முதியவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.எனவே இந்த பள்ளங்களையும், கழிவுநீர் மூடிகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Related Stories: