ஊட்டி காந்தல் பகுதியில் பராமரிப்பின்றி காட்சி தரும் நீரேற்று நிலைய வளாகம்

 

ஊட்டி, ஜூலை 3: ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள நீரேற்று நிலைய வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் ஊட்டி நகராட்சி நீரேற்று நிலையம் உள்ளது.

இந்த நிலையத்தில், இருந்து தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நீரேற்று நிலைய வளாக பகுதியானது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், லாரிகள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வளாக பகுதியை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: