பந்தலூர் பகுதியில் அரசு பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள்

 

பந்தலூர், ஜூலை 1: பந்தலூர் பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் அரசு பேருந்துக்காக பல மணிநேரம் காத்திருக்கின்றனர். பந்தலூர் தாலுகா தலைநகரமாக உள்ளது. பந்தலூரில் இருந்து கூடலூர், ஊட்டி மற்றும் கோவை போன்ற சமவெளி பகுதிகளுக்கு செல்வதற்கு பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, குந்தலாடி, பொன்னானி, உப்பட்டி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் பந்தலூர் பஜாருக்கு வந்து இங்கிருந்து பிறப்பகுதிகளுக்கு செல்கின்றனர்.

அரசு போக்குவரத்து கழகம் கூடலூர் கிளையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறித்த நேரத்தில் முறையாக இயக்கப்படாததால் பயணிகள் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. பொது பேருந்து சேவையை நம்பியுள்ள பயணிகள் குறித்த நேரத்தில் தாங்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே அரசு பேருந்துகளை குறித்த நேரத்தில் முறையாக இயக்க போக்குவரத்து கழகம் கூடலூர் கிளை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: