ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணைய தளத்தில் வௌியிட்ட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான புகாரில், சென்னை சைபர் க்ரைம் போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதான ரஜினி, ஜெயப்பிரகாஷ் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் தலைமறைவாக உள்ளனர். கைதான இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: