ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறல் இருந்தால் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்

சென்னை: ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறல் இருந்தால் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் என்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் பதியாத வீட்டு மனை திட்ட விளம்பரங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம். சந்தை விலை அல்லது மற்றவர்களின் வீட்டு மனை திட்டங்களோடு ஒப்பீடு செய்து ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் கூடாது என்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related Stories: