நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சரை பதவி விலகக்கோரி போராட்டம்

 

திருவாரூர், ஜூலை. 2: நீட் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை கரப்பான்பூச்சி ஜனதா உள்ளிட்ட பல் வேறு கட்சியினர், மாணவர் அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மன உளச்சலுக்கு ஆளான மாணவர்கள் ஆங்காங்கே தங்களது உயிரை மாய்த்து கொண்ட தால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போயுள்ளது. இதற்கு பொறுப்பேற்க வேண் டிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை காப்பாற்றி கொள்வதில் முனைப்பாக இருந்து வருகிறார்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடிகளால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப் பட்டுள்ளது. அதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று கோரி நாடுமுழுவதும் மாணவர்கள் போரட்ட களத்தில் குதித்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக, நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதவி விலக வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

 

Related Stories: