சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நமது நட்பின் ஆழமான பிணைப்பு நமது உறுதியைத் தொடர்ந்து வலுப்படுத்தட்டும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஒரு அரசியல் இயக்கத்தின் உண்மையான வலிமை என்பது தேர்தல்களில் வெற்றி பெறுவதில் மட்டுமல்ல, மாறாக அதன் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்து, தலைமுறைகளைக் கடந்து அவற்றை முன்னெடுத்துச் செல்வதில்தான் உள்ளது. சமூக நீதி, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி விழுமியங்களை நிலைநாட்டும் நமது கூட்டுப் பயணத்தில், எழும் சவால்கள் அனைத்தையும் முறியடிக்க, நமது நட்பின் ஆழமான பிணைப்பு நமது உறுதியைத் தொடர்ந்து வலுப்படுத்தட்டும். அம்முயற்சியில் உங்களுக்குத் தொடர் வெற்றியும், அதோடு நல்ல உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல ஆண்டுகள் சிறப்பான பொதுச்சேவை புரியும் வாய்ப்பும் அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: