தவெக சார்பில் நடத்தப்படும் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தை கம்யூனிஸ்ட்கள் புறக்கணிப்பு: முதல்வர் விஜய்யை தனியாக சந்திக்க திட்டம்

சென்னை: தவெக சார்பில் இன்று நடத்தப்படும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்கள் முதல்வர் விஜய்யை தனியாக சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்குப் பிறகு தவெக கூட்டணி அரசில் விசிக, ஐயுஎம்எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

மேலும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது அந்தக் கூட்டணியில் மதிமுகவும் சேர்ந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு தவெக ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

அதில் விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. ஆனால் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், முதல்வர் விஜயை இன்று தனியாக சந்தித்து மக்கள் பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனுவை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: