ஆய்வு என்ற பெயரில் வரம்பு மீறல், மிரட்டல் கிருஷ்ணகிரியில் த.வெ.க எம்எல்ஏவை கண்டித்து அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டுவளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி தவெக எம்எல்ஏ முகுந்தனை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். இதில், ஆய்வு என்ற பெயரில் தவெக எம்.எல்.ஏ. அதிகார வரம்பை மீறுவது, ஊழியர்களை மிரட்டுவது, ஆய்வுக்கு வரும் போது மூன்றாம் மனிதர்களை அனுமதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், மாநில துணைத்தலைவர் தினேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி தவெக எம்.எல்.ஏ முகுந்தன், பட்டு வளர்ச்சித்துறையில் ஆய்வு மேற்கொண்டபோது, உடன் மூன்றாம் தர நபர்களுடன் வந்துள்ளார். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர், எப்படி ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள முடியும். துறை ரீதியான அமைச்சரோ, அல்லது பொறுப்பு அமைச்சரோ மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யலாம். ஏதோ ஒரு தொகுதியில் இருந்து கொண்டு, மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்வது ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: