தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

 

திருவள்ளூர், ஜூன் 30:பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போல் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ தொடர்பாக, தவெக அமைச்சர் சரத்குமாரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவள்ளூரில் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவர் அணி சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாநில மாணவர் அண துணை செயலாளர் க.அமிழ்தரசன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் முரளிசேனா, தியாகராஜன், வெற்றி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் திராவிட பக்தன், பகலவன், ஆதிசேஷன், நாகலிங்கம், ப.சிட்டிபாபு, நகர, ஒன்றியச் செயலாளர்கள் தி.வை.ரவி, கே.அரிகிருஷ்ணன், எஸ்.மகாலிங்கம், மோ.ரமேஷ், டி.மோதிலால், பிரகாஷ்ஞானஒலி, பா.சம்பத், கே.ராஜேந்திரன், ஜான், மாவட்ட இளைஞர் நிர்வாகிகள் ம.கிரண், கே.சுரேஷ்குமார், பாபு, புவனேஷ்குமார், ஆணழகன் டி.ஆர்.திலீபன், டி.ஜெ.ஜி.மனோஜ் (எ) தமிழரசன், கு.பிரபாகரன், லிங்கேஷ்குமார், வழக்கறிஞர் பி.கே.நாகராஜ், கே.ஏ.மதியழகன், பி.ஆர்.பிரபாகரன், தாடி நந்தாகோபால், புட்லூர் ராஜேந்திரகுமார், சரஸ்வதி சந்திரசேகர், சி.சு.விஜயகுமார், சித்திக் அலி, கமலக்கண்ணன், பரசுராமன், ரவி, கைலாசம், குப்பன், சிவக்குமார்,

டில்லிபாபு, கொப்பூர் திலீப்குமார், ஆர்.மோகனசுந்தரம், சி.ஆர்.குமரன், ராம்கி உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

Related Stories: