பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு – நாளை முதல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு ஜூன் 30 முதல் ஜூலை 7 வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் www.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: