தெருக்களில் சாதிப்பெயர் நீக்க அரசாணைக்கு தடை நீட்டிப்பு

மதுரை: சாலைகள், தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கான இடைக்கால தடையை நீட்டித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பரமசிவம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடைமுறையில் பல பிரச்னைகள் உள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டியது உள்ளது. எனவே, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: