விவசாய கடன் தள்ளுபடி; ரூ.6,000 கோடிய பண்ணிட்டோம்… அதனால யோசிச்சு சொல்றோம்… அமைச்சர் கூல் ரிப்ளை

கும்பகோணம்: கும்பகோணத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் ரவி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆட்சிக்கு வந்த 40 நாட்களிலேயே எந்த ஒரு அரசாங்கமும் ரூ.6,000 கோடி கடன் தள்ளுபடி செய்து கொடுத்தது கிடையாது. நாங்க (தவெக) வந்த 40 நாட்களில் விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறோம். வரும் நாட்களிலும் முதல்வர் விவசாயிகளுக்கான முழு கடன் தள்ளுபடியை பற்றி ஆலோசனை செய்து அறிவிப்பார்.  ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்துவோம்.

முதலில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வருகிறோம். வாழைக்கு காப்பீடு குறித்த ஆலோசனை கூட்டம் விவசாயிகளுடன் இந்த வாரம் மேற்கொள்ள உள்ளோம். தற்போது வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை போல வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விரைவில் வெளியிட வாய்ப்பு உள்ளது. முதல்வர், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு போகணும்கிறது தான் அவருடைய எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: